×

தெலங்கானா முதல் ஆளுநர் நரசிம்மன் உடல்நலம் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்

சென்னை: தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்து சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: சட்டீஸ்கர், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும்,

தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநராகவும் பணியாற்றிய ஈ.எஸ்.எல்.நரசிம்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியறிந்ததும், நேரில் சென்று நலம் விசாரித்தேன். அவர் விரைவில் நலம்பெற்று தனது பணிகளை தொடர விழைகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Telangana ,First Governor ,Narasimman Health ,Md. KKA Stalin , MK Stalin inquired about the health of Narasimhan, the first Governor of Telangana
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...